சீர்காழி அருகே 666 கிலோ குட்கா பறிமுதல்- 4 பேரை கைது செய்த ஆணைக்காரன் சத்திரம் போலீசார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆனைக்காரன் சத்திரம் போலீஸ் சரகம் தைக்கால் சையது நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மினி வேனில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இறக்கப்படுவதாக. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து ஆனைக்காரன் சத்திரம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து பார்த்தபோது வேனில் கொண்டுவரப்பட்ட ஹான்ஸ் 420 கிலோ கூலிப் 246 கிலோ என மொத்தம் 666 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது, இதனை அடுத்து குட்கா பொருட்கள் அவற்றை கொண்டுவர பயன்படுத்திய மினி வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை விற்பனை செய்த கேரளா தேன் குறிச்சி பாலக்காடு கொடுவாயூர் பகுதியை சேர்ந்த முகமது தவ்பிக்.30, வீட்டின் உரிமையாளர் கல்யாண சுந்தரம்.80. ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கல்யாணசுந்தரம் மனைவி பானுமதி நடத்தி வரும் பெட்டிக்கடையில் இருந்து ரூ 50,000 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் வாகனம் ரொக்க பணத்தில் மொத்த மதிப்பு ரூ 35 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் குட்கா பொருட்கள் எங்கிருந்து எப்படி கொண்டுவரப்படுகிறது. வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இதற்கு உறுதுணையாக இருந்த கொள்ளிடம் பகுதியை சேர்ந்த பாஸ்கர்(47) பாலச்சந்தர் (48) உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.















