விழுப்புரம் மகளிர் சுய உதவி குழு தயாரித்த பொருட்கள் கண்காட்சியோடு சந்தை
மகளிர் திட்டம் சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம் எம்.ஜி. ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சி கல்லூரி சந்தையின் முதல் விற்பனையை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். இந்த கல்லூரி சந்தையில் சுய உதவிக் குழு பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், சிறுதானிய உணவு வகைகள், துணி வகைகள் போன்ற பல பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இதனை கல்லூரி மாணவிகள் ஆர்வமாக கண்டு களித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர் இதில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் துணை ஆட்சியர் பயிற்சி ஹரிஷ் உதவி திட்ட அலுவலர் ராஜா விற்பனை மேலாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்

















