July 27, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்

by Satheesa
July 26, 2025
in Bakthi
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளுர் மாவட்டம் திருப்பாச்சூர் என்னுமிடத்தில் அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 249 வது தேவாரத்தலம் ஆகும்.

Did you read this?

பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025

அருள்மிகு இருதயாலிஸ்வரர் திருக்கோயில்

July 25, 2025
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக தரிசனம்

July 24, 2025

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதி~;டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார்.
இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இங்குள்ள தல விநாயகர் வலம்புரி விநாயகர். இங்குள்ள விமானம் கஜபிரு~;டம்.

சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை சிவன், அம்பாள் திருமணம் செய்த கோலம் என்பார்கள். இருவரது சன்னதிகளுக்கும் இடையே விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் அமைந்து சுப்பிரமணியர் என ஒரே வரிசையாக சிவ குடும்ப தெய்வங்கள் இருக்கிறது. இவ்வாறு கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம். ராஜகோபுரத்திற்கு நேரே நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலவர் விமானம் அமைப்பிலும், அம்பாள் விமானம், கோபுரம் போன்ற அமைப்பிலும் வித்தியாசமாக இருக்கிறது. துர்க்கை காட்சி தருகிறாள்.

தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நேரத்தில் சிவனை தரிசித்தால் ஆணவம், பொய் சொல்லும் குணங்கள் மறையும் என்கிறார்கள்.

தட்சனின் யாகத்திற்கு சென்றதால் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும்படி சபித்தார் சிவன். சாபத்தால் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்த அம்பாள், சிவனை வேண்டி தவம் செய்தாள். அவளுக்கு இரங்கிய சிவன், அம்பாளை” காதலியே!’ என்று சொல்லி அன்போடு அழைத்து அவளை மன்னித்து அருளினாராம். இதனால் இங்குள்ள அம்பாளை “தங்காதலி அம்பாள்’ என்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. அம்பாளின் பெயரால் இவ்வூருக்கு “தங்காதலிபுரம்” என்ற பெயரும் உண்டு.

வி~;ணு அசுரர்களை அழித்த தோ~த்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதி~;டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, “விநாயகர் சபை’ என்கின்றனர்.

இதில் மூன்று விநாயகர்கள் கிழக்கு பார்த்தும், இவர்களுக்கு பின்புறத்தில் இருபுறமும் சிறிய விநாயகர்களுடன் நடுவில் ஒரு பெரிய விநாயகரும், இடப்புறத்தில் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.
திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற சிவன் விநாயகரை வணங்காமல் செல்லவே அவரது தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அவர் ஒரு சபை அமைத்து சிவனிடம், தன்னை வணங்காமல் சென்றது ஏன்? என கேட்டு விசாரணை செய்ததாகவும் விநாயகர் சபை உண்டானதற்கு மற்றொரு வரலாறு சொல்கின்றனர்.

இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் ஒருவன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி காளியுடன் போரிட்டு அதனை வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். பின் மன்னன் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றினான்.
நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் மூங்கில் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் தொடர்ந்து இங்கு ஒரு சிறு மேட்டின் மீது அடிக்கடி பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தான். மன்னன் மண்ணிற்கு அடியில் தோண்டி பார்க்க உத்தரவிட்டான். காவலர்கள் இவ்விடத்தில் வாசி எனும் கருவியால் தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணிற்கு அடியில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த மன்னன் அடியில் பார்த்தபோது சிவன், சுயம்பு லிங்கமாக இருந்தார். பயந்துபோன மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.
மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய வி~ம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவில் தானே பாம்பாட்டியாக வந்ததையும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் மன்னனுக்கு உணர்த்தினார் சிவன். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் எழுப்பினான். வாசி எனும் கருவியால் வெட்டுப்பட்ட சிவன் என்பதால் இவர், “வாசீஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார்.

மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். இதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலை செய்யமுடியவில்லை. எனவே, மகாவி~;ணு மத்ஸ்ய அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். இதனால் அவரை தோ~ம் பிடித்தது. இத்தோ~ம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோ~ம் நீங்கும் என்றார். அதன்படி மகாவி~;ணு இங்கு வந்தார். இங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோ~ம் நீங்கப்பெற்றார். சிவனும் சுயம்புவாக எழுந்தருளினார்.

Tags: siven templetamilnaduthirupachurvasivara swami temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய ராசிபலன் – ஜூலை 26, 2025 (சனிக்கிழமை)

Next Post

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

Related Posts

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக்கரையில் தர்ப்பண வழிபாடு!
Bakthi

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக்கரையில் தர்ப்பண வழிபாடு!

July 24, 2025
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் திறந்திருக்கும்!
Bakthi

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் திறந்திருக்கும்!

July 23, 2025
Bakthi

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

July 23, 2025
Bakthi

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்

July 23, 2025
Next Post
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

July 26, 2025
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

July 26, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

‘கூலி’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

July 26, 2025
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

July 26, 2025

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

0

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

0

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

0

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

0

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.