தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்!.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் இராஜாவூர் பகுதியில் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதன் தலைமை ஆசிரியராக நல்ல ஆசிரியர் விருது பெற்ற இந்தரா உள்ளார் மேலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒவ்வொரு திறமைகளில் தனித்துவமாக விளங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை பெருமைப்படுத்தும் விதமாக அந்தப் பள்ளியைச் சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்கள் வர்ணிகா மற்றும் திகழரசன் இரண்டு பிஞ்சு குழந்தைகளும் தங்களது மழலை குரலில் தங்க தளபதி எங்கள் தளபதி என பாடல் பாடினர்.
மேலும் தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகளை பாடி அசத்தினர்.
அந்தப் பாடலில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் இலவச மடிக்கணினி தராங்களாக என சிறுமி கேட்க மற்றொரு சிறுவன் தராங்களே தராங்களே என பாடி அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது..

















