மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக வெற்றி கழக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தால் 10,000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு எம்பிளாயீஸ் எலக்ட்ரிசிட்டி போர்டு பெடரேஷன் நாகை வட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு எம்பிளாயீஸ் எலக்ட்ரிசிட்டி போர்டு பெடரேஷன் சங்கத்தின் நாகப்பட்டினம் வட்ட மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டில், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 2023 முதல் 2026 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும், இரண்டு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரும், வேலைப்பளு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது வழங்கப்படும் பணிக்கொடை 25 லட்ச ரூபாயை மின்வாரியாக ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுதும் மேற்பார்வை பொறியாளர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை அதனை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அரசு அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்வதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் 60000 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15000 நேரடி நியமனங்களும் ஐந்தாயிரம் விடுபட்ட கவர்மெண்ட் நியமனங்களும் மேற்கொள்ளப்படும் என அரசு உறுதி அளித்து இருந்தும், அதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மின் பயனாளர்களுக்கும் செலவு அதிகரிக்கும். இதனை எல்லாம் சரிப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்பி, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார.













