நாடாளுமன்ற தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கருப்பு பலூன்களுடன் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, பலூன்களை உடைத்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர் :-
நாடாளுமன்ற தொகுதி வரையறை சட்டத்தை இயற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த தொகுதி வரையறை காரணமாக தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை பாதிக்கப்பட கூடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுதி மறு வரையறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மயிலாடுதுறையில் கருப்பு பலூன் உடன் கண்டன பேரணி நடைபெற்றது. பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது அங்கு கருப்பு பலூன்களை கையில் ஏந்தி எவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலூன் களை உடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பானுசேகர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.













