சென்னை : நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். அவருடைய திருமணம் குறித்த தகவல்களை ரசிகர்கள் நீண்டநாளாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
முன்னதாக, ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளதாகவும், நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்டதும் தனது பிறந்தநாளில் திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.
ஆனால், நடிகர் சங்க கட்டட பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், இன்று அவரது பிறந்தநாளில் திருமணம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில், விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடபுடலான விருந்து ஏற்பாடும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.