நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வெற்றித்திரைப்படமாகவும் அமைந்தது. இதையடுத்து, விஷால் தற்போது தனது 35-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் பூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்குகிறார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். இது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு, விஷால் நடிக்கும் படத்திற்கு ஜிவி இசையமைக்கும் இரண்டாவது முறை ஆகும்.
படத்தை ஆர்.பி. சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாகும். கதாநாயகியாக துஷாரா விஜயன் தேர்வாகியுள்ளார்.
படத்தின் பூஜை விழாவில் நடிகர்கள் ஜீவா மற்றும் கார்த்தி கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















