விழுப்புரம் புதிய பேருந்து நீரில் மூழ்கியது உடனடியாக தண்ணீரை வெளியேற்ற விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அதிரடி நடவடிக்கை 100 hp மோட்டார் பொறுத்து தண்ணீரை வெளியேற்ற தொடங்கியதால் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது
விழுப்புரத்தில் நள்ளிரவு செய்த கனமழையின் காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது, இதனால் வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் நேரில் ஆய்வு செய்து மழைநீரை வெளியேற்ற அதிகாரிக்கு அறிவுறுத்தினார்
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இதன் காரணமாக விழுப்புரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோலியனூர்,விக்கிரவாண்டி,முண்டியம்பாக்கம்,அரசூர்,வளவனூர் உட்பட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேருந்து மூலம் வேலைக்கு செல்வார்கள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து நிலையம் உள்ளே சென்று பேருந்து ஏற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

















