தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கிடையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘STR 49’. இது கடந்த வெற்றி – வடசென்னை படத்தின் தொடர்ச்சியாக அல்ல; ஆனால் கதைக்களம் வடசென்னை உலகில் நடக்கும் என்பதால் ரசிகர்களிடையே வெகுவாக ஆவல் மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரோமோவின் வெளியீடு :
வெற்றி மாரான் 50வது பிறந்த நாளான செப்டம்பர் 4 அன்று ‘STR 49’ படத்தின் ப்ரோமோ டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டீசர் மட்டுமே தற்போது வெளிவரையிலும், முழு ப்ரோமோ அக்டோபர் 4 அன்று வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் குறித்து ஆர்வம் :
இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தில் உள்ளது. வெற்றி மாரான் படங்களில் பெரும்பாலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால் ‘STR 49’ படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என செய்திகள் பரவுகின்றன.
இதுவரை வெற்றி மாரான் ஜி.வி. பிரகாஷ் தவிர்த்து சந்தோஷ் நாராயணன், இளையராஜா போன்றோர் உடன் பணியாற்றியுள்ளார். எனவே, இந்த படத்தில் அனிருத் – வெற்றி கூட்டணி இணைந்தால், இது முதல் முறை நடக்கும் கூட்டணி ஆகும்.
மேலும், சிம்பு – அனிருத் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருந்தாலும், இதுவரை எந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. எனவே, ‘STR 49’ படம் மூலம் அவர்கள் கூட்டணி முதல் முறையாக உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அக்டோபர் 4 அன்று வரும் முழுப் ப்ரோமோவில் அனிருத் பெயர் வெளிப்படுமா என்பதை ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
















