மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு ஓய்வு கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு.
வயதான மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு ஓய்வுஅளிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலோக் அஸ்வனி குப்தா என்ப வர் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மயிலாடு துறை மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை எனும் யானை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை 60 வயதை நெருங்குவதால், அதற்கு ஓய்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின் படி 60 வயதான யானைகளுக்கு ஓய்வு அளித்து, கோவையில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும். இதுகு றித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், யானை ஓய் வுபெற அனுமதிக்காவிட்டால், அதை துன்புறுத்துவது போலாகி விடும். யானை மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய குழு அந்த யானையை பரி சோதித்தபோது, கான்கிரீட் தரையில் நிற்க வைத்துள்ளனர். யானை குளிப்பதற்கான தொட்டி உள்ளிட்ட வசதிகள் இல்லை என வாதி டப்பட்டது.
அதற்கு அரசுத் தரப்பில், யானை நல்ல முறையில், முறையாக பராம ரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு எந்த காயமும் இல்லை என வாதி டப்பட்டது. அப்போது இடையீட்டு மனுதாரரான விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன், யானையை வேறு இடத்துக்கு மாற்று வது அதன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.













