அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்:
பேட்டி 1) பசுபதி( மாவட்ட செயலாளர் – அதிமுக)
கடந்த 11ஆம் தேதி செஞ்சி எடுத்த வல்லம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவட்ட செயலாளர்கள் பசுபதி கார் மீது கல்விசபட்டது.
இந்நிலையில் சி.வி.சண்முகம் மற்றும் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் ரூபன் ராஜ், வெங்கடேசன், பாலாஜி, ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் என்னை கொலை செய்யும் நோக்கத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பசுபதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்ததாக பசுபதி தெரிவித்தார்













