விழுப்புரம் அருகேயுள்ள பனையபுரத்தில் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரம் கிராமத்தில் ஏர்டெல் டவர் ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியில் மற்றொரு ஏர்டெல் டவர் அமைக்கும் பணியை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருவதால் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். பொதுமக்கள் புகாரளித்தும் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி பனையபுரத்தில் டவர் அமைக்கும் இடத்தில் தவெக தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையிலானோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் டவர் அமைக்க கூடாதென்றால் ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு அளிக்க கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏற்கனவே டவர் அமைத்ததினால் பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
பேட்டி:வடிவேல்
(தவெக தென்மேற்கு மாவட்ட செயலாளர்)
