விழுப்புரம் :
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகளுடன் இணைந்து இன்றுகாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் எச்.ஐ.வி./எய்ட்ஸால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நாள் மற்றும் உலக எச்.ஐ.வி. தடுப்பூசி விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார அலுவலருமான டாக்டர் G. ஸ்ரீப்ரியா தலைமையிலானார். மாவட்ட திட்ட மேலாளர் திருமதி R. பிரேமா வரவேற்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கையெழுத்துப் பிரச்சாரம், உறுதிமொழி ஏற்பது, மற்றும் பாஸிட்டிவ் ஸ்பீக்கர் உரை இடம்பெற்றன. முக்கிய விருந்தினர்கள் உரையாற்றினர்.
பேராசிரியர் டாக்டர் T. சுதாகரன் (துணை இயக்குநர், தொழுநோய் பிரிவு), திரு க. சிவஞானசுந்தரம் (மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்), மருத்துவர்கள் டாக்டர் A. விஷ்ணுகுமாரன், டாக்டர் இரவிராஜா, டாக்டர் சாமுண்டீஸ்வரி, சமூக நல அலுவலர் திருமதி ராஜம்மாள், விரிவாக்க கல்வியாளர் திருமதி புவனேஸ்வரி, NGO பிரதிநிதிகள் திருமதி பத்மாவதி மற்றும் திரு நந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, VDS+/DIC குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் உதவிபெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள், ஆலோசகர்கள், களப்பணியாளர்கள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.