- இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- பீஹாரில் நடந்த தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணியில் 35 லட்சம் வாக்காளர்கள் எங்கே உள்ளனர் என கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகிறது.
- மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 14 ஆயிரம் ஆண்களும் பெற்றது தெரியவந்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, சியாச்சின் சென்றுள்ளார். அங்கு, 18 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படை பிரிவு வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
- உலக கோப்பை செஸ் பைனலில் இந்திய வீராங்கனைகள் ஹம்பி – திவ்யா மோதிய 2வது சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால், டை பிரேக்கர் சுற்றின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார்.
- போலி துாதரகம் நடத்திய ஹர்ஷவர்தன் ஜெயின், 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையில் 162 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரூ.300 கோடி மோசடி செய்ததை உத்திரபிரதேச சிறப்பு அதிரடி படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
- பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. எழுதும் போதும், வாசிக்கும் போதும் பாரதத்தை பாரதம் என்றே குறிப்பிட வேண்டும், என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
- வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் போது குரைக்கக் கூடாது என்ற கட்டளையின் கீழ் மோப்ப நாய்களுக்கு டில்லி போலீஸ் சிறப்பு பயிற்சி அளித்துள்ளது.
- நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை, ஜக்தீப் தன்கர் வெளிப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
- போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து, கம்போடியா நாடுகள் ஒப்புதல் தந்துள்ளதாக டிரம்ப் கூறினாலும், இருநாடுகள் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.