- புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர்.
- தீபாவளிக்கு மறுநாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர். அவர்களின் ஆதிக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், என பிரதமர் மோடி கூறினார்.
- பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகளே கூட்டணியை மதிக்காமல் இஷ்டம் போல் வேட்பாளர்களை அறிவித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
- இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையின் போது இந்தியா செய்த உதவிக்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என இலங்கை பிரதமர் கூறியுள்ளார்.
- தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக இந்து விரோத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மக்களையும் சமமாகவே நடத்த வேண்டும். ஆனால், திமுக அரசு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறக்கூட மனமில்லாமல், இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பை கக்கி வருகிறது.
- கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை முதல்வர் ஸ்டாலின் வீணடித்துக் கொண்டு இருக்கிறார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
- திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.
- சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால உத்தரவிட்டது.

















