- இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் இளையராஜா என ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார்.
- ஓட்டுத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் , என முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்ஓய் குரேஷி கூறியுள்ளார்.
- ஆள்வைத்து கதையாடல் செய்தோர் தற்போது புலம்பத் துவங்கி உள்ளனர். முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்ற பெயரில் வெளிப்படுத்தியிருந்தனர், என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக அதிகம் பேச முடியவில்லை , என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
- பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார்.
- அனைவரின் கணிப்புகளை பொய்யாக்கி, இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- போலந்தை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ருமேனியாவிலும் ரஷ்ய டிரோன் ஊடுருவி சென்றது ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- ஆன்லைன் சூதாட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மற்றும் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- இந்தியா வரியை குறைக்க வேண்டும் அல்லது அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்வதற்கு கடினமான நேரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
- அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.















