- தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நீதிமன்ற உத்தரவையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
- தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர்ஐ, விஏஓ கையெழுத்துடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புடின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார்.
- சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது எப்-16 போர் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி உயிரிழந்தார்.
- சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்துள்ளது. காலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்துள்ள நிலையில், மதியம் மீண்டும் ரூ.520 உயர்ந்தது. இதனால், கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,840 உயர்ந்துள்ளது.
- கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி அப்படியே உள்ளது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.