ஊட்டியாக மாறிய திருவாரூர் – முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்..
திருவாரூரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 8 மணி அளவிலும் பனி படர்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய திருக்குளம் நடுவே அமைந்துள்ள மேகநாத சுவாமி ஆலயம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் படர்ந்து காணப்படுகிறது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமண விழாவிற்கு செல்பவர்கள் பனிப்பொழிவு காரணமாக கடும் அவதி அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இருந்த பனிப்பொழிவை காட்டிலும், இன்று மிக அதிக அளவில் திருவாரூர் மாவட்டத்தில் பனிமூட்டம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.














