சென்னை :
நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது JD கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மாஸ்டர் 2 குறித்த தனது எண்ணங்களை வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய் எடுத்து நடித்த JD எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்திருந்தது. ஜாலியான, எதைப்பற்றியும் பெரிதும் கவலைப்படாத என்று சொல்லக்கூடிய அந்த கதாபாத்திரம், விஜயின் முந்தைய பட ரோல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மூன்று வெவ்வேறு டைம்லைன்களில் JD-யாக விஜய் நடித்த விதம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 குறித்து நடிகர் விஜய்யிடம் பேசியதாக லோகேஷ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவல்களில் அவர் கூறியதாவது :

“மாஸ்டர் பாகம் 2-க்கான ஐடியாவை விஜய் அண்ணாவிடம் சொன்னேன். அது ரொம்ப ஜாலியா இருக்கும். ரசிகர்களுக்கு JD கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு. LEO 2-க்கான ஐடியாவையும் சொன்னேன். ஆனால் இப்போ அவருடைய எண்ணம் வேற மாதிரி இருக்கு. அது இப்போதைக்கு ரொம்ப முக்கியமான தேவை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு படங்களுமே பண்ணணும்னு ஆசை.”
லியோ படம் முடிந்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இதில் நடிக்கிறார் – சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலரும். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் லோகேஷ், விஜயுடன் மீண்டும் பணியாற்றும் நோக்கத்துடன் மாஸ்டர்-2, லியோ-2 ஐடியாக்களை சுடுசுடு வைத்திருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு புது ஏக்சைட்ட்மென்ட் !