அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இம்முறை அதிமுக, திமுக ஆகிய இரு முக்கிய கூட்டணிகளையும் கைவிட்டு தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது
அதேபோல் அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் பயணித்த புதிய தமிழகம் கட்சியும் ஆட்சியில் பங்கு அளிக்கும் கூட்டணியான தவெக உடன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
அதேபோல் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தல் நெருக்கத்தில் திமுக கூட்டணியில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் மேலும் சில இஸ்லாமிய கட்சிகள் விஜய் பக்கம் வரும் என்கின்றனர்.
தற்போதைய சூழலில் தேமுதிக, ஓபிஎஸ் அணி, புதிய தமிழகம், அமமுக, தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் விஜய் தலைமை ஏற்று கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.