தவெக அரசு குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது எப்போது எழுந்து நடக்கும் என்று தெரியவில்லை தந்தை பெரியார் திராவிட கழக கோவை கு. ராமகிருஷ்ணன் கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காங்கிரஸ் அரசை கண்டித்தும், கர்நாடகாவில் மேகதாட்டில் கட்டப்பட்டு வரும் அணையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட் என்ற இடத்திலே அணையை கட்டி வருகிறது இந்த அணையை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய காவிரிநீர் முழுமையாக பாதிக்கப்படும் இந்த நிலையில் அந்த அணையை கட்டுகிற கர்நாடகா அரசை ஒன்றியத்தில் ஆளக்கூடிய மோடி அரசு தடுத்து நிறுத்தவில்லை தமிழ்நாடு அரசு வலிமையாக உச்ச நீதிமன்றத்தில் அதை சட்டரீதியாக இன்னும் வழக்கு தொடுத்து தடுத்து நிறுத்தக்கூடிய மகிழ்ச்சியை மேற்கொள்ளவில்லை இந்த கர்நாடக அரசின் அணை கட்டுகிற பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது இதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடத்தின் சார்பிலே சீர்காழியில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம் கர்நாடகா அந்த அணை காவிரியில் கட்டப்படுகின்ற போது நம்முடைய உரிமைகள் மறுக்கப்படும் நதிநீரிலே கடை மடையில் இருக்கக்கூடியவருக்கு தான் முழு உரிமை உண்டு ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கர்நாடகா அரசு ஒரே நாடு எல்லோரும் இந்துக்களின் சொல்லக்கூடிய பிஜேபி ஆளக்கூடிய ஒன்றிய அரசு கூட இதை தடுத்து நிறுத்த முன்வரவில்லை தேசியம் பேச கூடிய காங்கிரஸ் அரசு அங்கே அணை கட்டுகிறது தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கெடுத்து கொண்டு இருக்கிறது காங்கிரஸ் ஆனால் தமிழ்நாட்டு மக்களை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை அதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக தலைவர் விஜய் அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள் விவசாயிகளுக்கு முழு கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்தார் அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஒவ்வொன்றிலும் குறை கூறி அவர்களை விட நாங்கள் இதை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு சொன்னதிலே ஒன்றுகூட செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கான நிவாரணத்தைக் கூட வெறும் அம்பதாயிரம் அதிகபட்சம் 50000 ஏக்கர் கணக்கில் அளவிடாமல் வெறும் பணத்திலே மட்டும் 50 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என்று அறிவித்தார்கள் இன்னிக்கு தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள் ஒவ்வொரு மக்களும் இருக்கின்றார்கள் விவசாயிகளை ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் இந்த அரசு குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்னும் தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது எப்போது எழுந்து நடக்கும் என்று தெரியவில்லை என்றார்
பேட்டி ; கோவை, கு.ராமகிருஷ்ணன்,பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிட கழகம்













