‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அரங்கேற்றமான அஸ்வத் மாரிமுத்து, சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த இப்படம், வெளியானதிலிருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் பின், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் அடுத்த படம் ‘எஸ்.டி.ஆர் 51’ என்ற பெயரில் உருவாகிறது. ‘God of Love’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘டிராகன்’ படத்தை தயாரித்த AGS நிறுவனம் இந்த புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து தற்போது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை அணுகி, தனது புதிய கதையை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இந்த தகவலால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து – கமல்ஹாசன் கூட்டணி உருவானால், அது ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
















