சீர்காழி (தனி) தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் பேரணியாக வந்து வேட்பு மனுவை நூதன முறையில் தாக்கல் செய்தார்.
விவசாயத்தை காப்பாற்ற ஏர்கலப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் சுரேஷ்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதால் அதற்காக வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது,இந்நிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ் மற்றும் கட்சியினர் மாட்டுவண்டியில் சீர்காழியின் முக்கிய கடைவீதி வழியாக பேரணியாக வந்து புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதில் 50 க்கும் மேற்பட்ட நாம்தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்

















