‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ், தற்போது விஜய் சேதுபதியின் 52-வது படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.
இதையொட்டி, ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. திரைப்படம் கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல், பிரிவு சண்டை, விவாகரத்து, நட்பு, புரிதல் என அனைத்தையும் பற்றி பேசியுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.