பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும், ‘பலே வெள்ளையத்தேவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தான்யா, ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘மாயோன்’, ‘ரசவாதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்துவரும் தான்யா, தனது நிச்சயதார்த்த செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவருடன் நீண்ட காலமாக காதலித்து வந்த தான்யா, அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
