மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நேபாளம் சுற்றுலா சென்ற பயணிகள் குறித்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை, பாதுகாப்பாக மீட்டு கொண்டுவர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை :-
நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், தமிழகத்தைச் சார்ந்த 100 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலம் சென்ற 57 பேரில் இவர்களில் ஏழு பேர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானத்தின் உறவினர் பேரிடரில் சிக்கி உள்ளவர்களை உடனடியாக மேற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏழு பேரின் குடும்பத்திற்கு நேரில் சென்று மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பேட்டி: பாண்டுரங்கன் மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம்
நேபாளில் சிக்கிக் கொண்டவர்கள்
1.புஷ்பலதா மனோகரன்,
- ரத்தினகுமார் குஞ்சிதபாதம்
- பூங்குழலி பொன்னம்பலம்,
- மணிமேகலை சுகுமார்
- சிவஞானம் வீராசாமி
- ராஜேஸ்வரி உதயகுமார்
- வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி















