மும்பை : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது இது தற்கொலையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணத்தை சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், வழக்கு நீண்டகாலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதன் மூலம் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், “அமெரிக்கா மற்றும் மும்பையைச் சேர்ந்த அமானுஷ்ய வல்லுநர்கள் இருவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்யவில்லை, அவரை இரு நபர்கள் கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளனர்” என ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சகோதரியின் இந்த புதிய குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
			















