மயிலாடுதுறையில் அதிரடி சோதனை – 4 டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பறிமுதல் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவின் படி,மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள்,சூப்பர் மார்க்கெட், சாலையோர கடைகள்,உணவகங்கள் மற்றும் பழச்சாறு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பிளாஸ்டிக் ஸ்பூன், பிளாஸ்டிக் கேரிபேக்குகள்,பிளாஸ்டிக் இலை,சில்வர் பேப்பர்,உணவு பார்சல் செய்து கொடுக்கும் பிளாஸ்டிக் கண்டைனர்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.நான்கு டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு,விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு அபதாரமும் விதிக்கப்பட்டது.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.















