தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்..
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் திருபுரசுந்தரி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவித்திட வேண்டும், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி எண் 319 நிறைவேற்றிட வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பையும் முன் பருவக் கல்வி முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பி எல் ஓ பணியில் இருந்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரேமா, மாநில இணைச்செயலாளர் தவமணி மாநில செயற்குழு உறுப்பினர் மாலதி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலையரசி, சாரதா, கலைச்செல்வி, சித்ரா மற்றும் சிஐடியு மாநில குழு நிர்வாகி மாலதி மாவட்ட செயலாளர் அனிபா, பொருளாளர் கஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
















