ஸ்ரீ லீலா வீட்டில் பிறந்த 3 வது குழந்தை..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீ லீலா. இவர் பராசக்தி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்தவ படிப்பு படித்துள்ளார் அவர் நடனம் மற்றும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறையில்
ஜொலித்து வருகிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இவர் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்து எடுத்தார் .அந்த குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீ லீலா மூன்றாவது ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துள்ளார் . இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ” இதயத்தின் மீதான படையெடுப்புக்கு வீட்டிற்கு மற்றொருவர் என பதிவிட்டு உள்ளார்.

நடிகை ஸ்ரீ லீலாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version