மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி பகுதியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவி தமிழ் எழுத்துக்கள் உருவாக்கி தமிழ் வளர்த்த தமிழறிஞர் சீகன் பால்கு அவர்கள் ஜெர்மனியில் இருந்து இந்தியாவில் தரங்கம்பாடிக்கு முதன் முதலில் வந்ததிலிருந்து தரங்கம்பாடியில் தமிழ்விவிலியத்தை மொழிபெயர்த்து அச்சிட்டது, தமிழ் இறையியல் கல்வி, சைவ இலக்கிய ஆய்வு என தமிழுக்காகப் பல பங்களிப்புகளைச் செய்து, அவர் இறந்து, தரங்கம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் அவர் இறப்பு வரையிலும் தமிழ் வளர்ப்பதற்காக அறும்பாடு பட்டார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது தரங்கம்பாடியில் கடற்கரையில் அவரது திருவுருவ சிலை உள்ளது இந்நிலையில் தரங்கம்பாடியில் சீகன் பால்கு அவருக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ் வளர்த்த பெருமையை எடுத்துரைக்கும் விதமாக சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது இந்நிலையில் சீகன் பால்கு மணிமண்டபம் அமைப்பதற்கு பொறையார் பகுதியில் அரசு சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது இந்நிலையில் சீகன் பால்கு வந்து இறங்கிய வாழ்ந்த தரங்கம்பாடி பகுதியில் அவருக்கு பெருமைப்படுத்தும் விதமாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் பொறையாறு பகுதியில் அமைவதை தரங்கம்பாடி பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தரங்கம்பாடி கடைவீதியில் வணிகர்கள் கடைகள் அடைத்து தரங்கம்பாடி மீனவ தலைமை கிராமம் வேலை நிறுத்தம் செய்து அனைத்து தரப்பு மக்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
















