விகடன் பிரசுரத்தில் வெளியான, எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், 1 லட்சம் பிரதிகள் விற்பனையாகி ஒரு வரலாற்றுச் சாதனையை உருவாக்கியுள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு, ‘வேள்பாரி 1,00,000’ என்ற தலைப்பில் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் வெற்றிச் சின்னத்தை (logo) திறந்து வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகை ரோகிணி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் உரையாற்றிய போது கூறியதாவது :
எனது முதல் கனவுப் படம் ‘எந்திரன்’ ஆக இருந்தது. தற்போது என் கனவுப் படம் ‘வேள்பாரி’.
இது உலகம் போற்றும் ஒரு தமிழ் படைப்பாக மாறும் என நம்புகிறேன்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு கதையமைப்பாக இருக்கிறது.
‘Game of Thrones’, ‘Avatar’ போன்ற உலக நிகரற்ற படைப்புகளுக்கு இணையாக, அறிவுப்பூர்வமும் ஜனரஞ்சகமும் கலந்து கூடிய ஒரு பெருமை மிக்க இந்திய மற்றும் தமிழ் காவியமாக இது உருவாகும் சாத்தியம் அதிகம் உள்ளது.”

















