தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்:-
தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாருக்கு, மற்ற இரண்டு தேர்தல் அதிகாரிகள் 14 முறை ஆட்சேபனை கடிதங்கள் எழுதியதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சீர்திருத்தம் மூலமாக பல கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைத்ததாக குற்றம் சாட்டிய நிலையில், இதனைக் கண்டித்தும் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் sdpi கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் முகமதுரபி தலைமை தாங்கினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.













