மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகளை நூற்றுக்கணக்கான பள்ளி சிறுவர் சிறுமியர் மேற்கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் மாணவ மாணவிகள் விதவிதமான படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு விழா துவக்க நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன















