September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு

by sowmiarajan
December 7, 2025
in News
A A
0
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் மோதல்: பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், பிளஸ்-2 மாணவர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் கவியரசன் (17), கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தப் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாகவே மோதல்கள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் கவியரசன் மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அதில் பிளஸ்-1 மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாகக் காவல்துறை இருதரப்புப் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது. சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் மீண்டும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு கவியரசன் தனது நண்பர்களுடன் பள்ளியில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, அங்கு வந்த பிளஸ்-1 மாணவர்கள் கவியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் தீவிரமடைந்து, இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது பிளஸ்-1 மாணவர்கள், கவியரசனை மரக்கட்டையால் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த கவியரசனை, சக மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மாணவர் கவியரசனின் உடல்நிலை மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் மாணவர் கவியரசன் மூளைச் சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், கவியரசனைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 15 பிளஸ்-1 மாணவர்களை நேற்று முன்தினம் (டிசம்பர் 5) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் தஞ்சையில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கிருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். மாணவர்களின் மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த இச்சம்பவம், பள்ளி வளாகங்களில் நிலவும் வன்முறையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Tags: education-related newsKumbakonam tragedySchool incidentstudent fightyouth violence
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு  முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Next Post

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம்: திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வினர் அஞ்சலி,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சொகுசு ஓட்டலில் ஈவன்ட் மேனேஜர் மீது கொடூரத் தாக்குதல் பாஜக நிர்வாகி உட்பட கும்பல் அதிரடி கைது

December 26, 2025
கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை

December 25, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.