சித்தர்கள் பல்வேறு சக்திகளைக் கொண்டவர்கள். தங்கள் தவ வலிமையின் மூலமாக சாதாரண மனிதர்களால் செய்யமுடியாத பல சாகசங்களைச் செய்பவர்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற ‘சக்கரை அம்மாள்’.
சிவபெருமானையும், ஸ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் வழிபட்டு வந்தமையால் இவர் ஸ்ரீ சக்ர அம்மா என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் இந்தப் பெயர் மருவி ஸ்ரீ சக்கரை அம்மா வானது.
இவர் 1854- ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில், தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் குருக்கள் இவர் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் அர்ச்சகர் ஆவார்.
தேவிகாபுரத்தில், ஆனந்தாம்பாளின் வீட்டுக்கு மிக அருகிலேயே பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்திருக்கும். அதனால் பெரியநாயகி அம்மன் கோயிலின் கருவறையை உற்று நோக்கியபடி மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதுதான் இவரின் பொழுதுபோக்காக இருந்தது.
தியானம் பற்றி எந்தப் பயிற்சியும் இல்லாமலேயே பல மணிநேரம் சிவமந்திரங்களைச் சொல்லியபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவருடைய 9-வது வயதில் சென்னையில் உள்ள கோமளீச்சுவரன் பேட்டை(புதுப்பேட்டை) சாம்பவ சிவாச்சாரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
கோமாளீச்சுவரன் கோயிலில் அடியார்களுடன் நாள் முழுவதும் ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். அதேபோல் தன் வீட்டு மொட்டை மாடியிலும் தியானம் செய்துவந்தார். ஆனந்தாம்பாளின் 20 ஆவது வயதில் அவரின் கணவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
நட்சத்திர குணாம்பாளுடன் உண்டான தொடர்பு கணவரை இழந்தபின்பு தன் சகோதரர் வசித்த போளூருக்கு குடிபெயர்ந்தார். போளூர், திருவண்ணாமலை என அந்தப்பகுதிகளில் வாழ்ந்த அத்தனைச் சித்தர்களின் ஆசிகளையும் பெற்றார்.

கௌதம முனிவரின் சீடரான ‘அடிமுடி சித்தர்’ முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை ஆனந்தாம்பாளுக்குக் கற்றுத்தந்தார். எப்பொழுதும் இறைவனைப் பற்றி சிந்திப்பதே முக்தி அடைவதற்கு சிறந்த வழி என்பதையும் போதித்தார்.
நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பாள் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடனும் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஆனந்தாம்பாளின் மீது நல்ல மதிப்பு இருந்ததால் தனது சி~;யையாக ஏற்றுக்கொண்டார்.
குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டார். மீண்டும் ஆனந்தாம்பாள் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால்தான் கற்று வைத்திருந்த ‘இலகிமா’ என்னும் வானில் பறக்கும் வித்தையை அவருக்குக் கற்றுக் கொடுத்தார் .
அதேபோல்தான் இறக்கும் தருவாயில் தன் ஆன்மிக ஆற்றல் அனைத்தையும் ஆனந்தாம்பாளுக்கு வழங்கினார் குணாம்பாள். இவர் சந்தித்த ஆன்மிகப் பெரியவர்கள்:
சுவாமி விவேகானந்தர், அடிமுடிப் பரதேசி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சே~த்ரி சுவாமிகள், விட்டோபா ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றவர்
ஸ்ரீ சக்கரை அம்மா’. பறந்தே சென்று திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.
1948 ம் ஆண்டு ஜனவரி மாதம், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சக்கரை அம்மாவின் சமாதியில் ஐந்து தினங்கள் தொடர்ந்து தியானம் மேற்கொண்டுள்ளார்.
1901 ஆம் வருடம் பிப்ரவரி 28 ம் நாள், சக்கரை அம்மா தம் உடலை விட்டு நீங்கினார். அவருக்கு அவருடைய சீடரான நஞ்சுண்டராவின் இடத்தில் சமாதி உள்ளது. இதன் மேல் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது.