சிவனை போற்றி பாடி வழி பட்டனர் அனைத்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்
ரஷ்யா நாட்டினர் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டிய இந்தியாவிற்கு வந்து இங்குள்ள நவக்கிரக கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து உலக நன்மை வேண்டி பல்வேறு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்,இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நவக்கிரகத்தில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் வைத்தியநாதசுவாமி,தையல்நாயகி அம்பாளுக்கு சிறப்பு யாகம், பூஜைகள் செய்து ரஷ்யா நாட்டு மக்கள் போர் பதற்றம் இல்லாமல் நிம்மதியா வாழ வேண்டி ரஷ்யா நாட்டினர் வழிபாடு நடத்தினர், தொடர்ந்து இவர்கள் நவகிரக ஸ்தலங்களில் பூஜைகள் செய்து வழிபடவும் வந்துள்ளனர் மேலும் இவர்கள் தமிழ் மொழியையும் தமிழர்களின் வழிபாட்டு முறையும் கற்று அறிந்து அதனை பின்பற்றவும் தமிழ் மொழியை நேசிப்பதாகவும் உலகம் முழுவதும் சென்று பரப்புவதாகவும் தெரிவித்தனர்.
















