ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில் 7000 ரன்கள் அடித்த வீரர் என்ற இமாலய சாதனைபடைத்த ரோகித் சர்மா, இதன் மூலம் கோஹ்லியின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 228 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியின்போது ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.