தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள், தங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள்.
குறிப்பாக மே மாத்தில்தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள். அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதத்தில்தான் ஓய்வு பெறுவார்கள். அதனடிப்படையில் 31ம் தேதி ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெற்றனர்