கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே திண்டிவனம் திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 95 பேர் கைது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் தாலுக்கா அலுவலகம் முன்பு மாநில துணைத்தலைவர் ஆதி லட்சுமணன் தலைமையில் வட்டாரத் தலைவர் கெடியரசு முன்னிலையில் 46 நபர்களும் மகளிர் ஆணைய ஜானகி, உமா , மற்றும்49 மகளிர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டிவனம் நேரு வீதியில் சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்குதல், பணிநிலைத்தன்மை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மறியல் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோசனை காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி தலைமையில்தயார் நிலையில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் திண்டிவனம் வட்டாட்சியர் வளாகம் முன்பு நேரு விதி பஜார் மார்க்கெட் பகுதியில்சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட95 பேரை கைது மாலை அனைவரையும் விடுவித்தனர் இறுதியாக போராட்டம் வெற்றி பெற கைதான வர்களுக்கு வட்ட பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்

Exit mobile version