April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“உடனே தாயகம் திரும்புங்கள்” – பாகிஸ்தான் எச்சரிக்கை !

by Priscilla
October 18, 2025
in News
A A
0
“உடனே தாயகம் திரும்புங்கள்” – பாகிஸ்தான் எச்சரிக்கை  !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து வசித்து வரும் ஆப்கன் அகதிகள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்த காலத்தில், பல லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானை நாடி அகதிகளாக குடியேறினர். ஆண்டுகள் கடந்தும், இவர்களில் பெரும்பாலோர் அங்கிருந்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஆனால், சமீபகாலமாக பாகிஸ்தான் அரசு, வெளிநாட்டு அகதிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு சுமையாக உள்ளதாக கூறி, அவர்களை மீண்டும் தாயகத்திற்கே அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா. அகதிகள் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் வரை சுமார் 15 லட்சம் ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள். அதில் 13 லட்சம் பேர் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அகதிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ளோர் சட்டபூர்வ அங்கீகாரம் இன்றியே தங்கி வருகின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது :

“ஆப்கானிஸ்தானுடன் எங்களின் உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வாழும் ஆப்கன் அகதிகள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். எங்களின் நிலமும் வளமும் 25 கோடி பாகிஸ்தானியர்களுக்கே உரியது. இனி எங்கள் பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தான் செல்லமாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதிலை அளிப்போம்,”

எனக் கடுமையாக அவர் எச்சரித்துள்ளார்.

Tags: AfghanistanPAKISTANwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

GST வரி குறைப்பால் இது தித்திக்கும் தீபாவளி – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Next Post

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன் – உருட்டி பிரட்டி குழப்பியடிக்கும் டிரம்ப்

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
Next Post
டிரம்ப்க்கும் நெதன்யாகுவுக்கும் பாராட்டுகள் – மோடி டிவீட்

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன் - உருட்டி பிரட்டி குழப்பியடிக்கும் டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.