*உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும், பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது பாமகவில் நடந்து வரும் அப்பா–மகன் பிரச்சனை என்பது குடும்பப் பிரச்சனை மட்டுமே. அது ஒரு மணி நேரத்தில் கூட தீர்க்கப்படக்கூடியது,”- செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி.
இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருமான டாக்டர் செ.கு. தமிழரசன் அவர்கள் விழுப்புரம் தனியார் தங்கும் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவருடன் இருவேல்பட்டு அ.குமார் மண்டல செயலாளர் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலரும் உடன் இருந்தனர்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். துணைத் தலைவர் பதவியில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அது அமலாக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் மேலும் மத்திய அரசு பெயரளவில் மட்டும் தூய்மை பணியாளர் களை மருத்துவ பணியாளர் என்றும் மோடி நான்கு தூய்மை பணியாளர்களை மட்டும் வாரணாசியில் வைத்து அவர்களது கால்களை கழவி கௌரவம் அளிப்பது போதாது. நிரந்தரப்படுத்தாமல் காலக்காலமாக கூலிப்பணியாளர்களாக வைத்திருப்பது தவறு,” என்றார்.
மேலும் அவர், “ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் தனி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் நடைமுறைக்கு வரவில்லை? விஜய், முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று கூப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை. இன்னும் எட்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. அம்பேத்கர் வழியை பின்பற்றுபவர்களுடனே எங்கள் கூட்டணி இருக்கும். திமுகவுடன் கூட்டணி இல்லை. புதிய கட்சி தொடங்கினாலும் சரி, பழைய கட்சியாக இருந்தாலும் சரி, அம்பேத்கர் பெயரை சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது, தேர்தலை சந்திக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது பாமகவில் நடந்து வரும் அப்பா–மகன் பிரச்சனை என்பது குடும்பப் பிரச்சனை மட்டுமே. அது ஒரு மணி நேரத்தில் கூட தீர்க்கப்படக்கூடியது,” என தெரிவித்தார்.
















