நடிகர் ரவி மோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வழியாக அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அவரை இயக்கி வரும் இயக்குனர் சுதா கொங்கரா, இன்ஸ்டாகிராமில்,
“படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தை தேடினால், அங்கே ரவி இருப்பார். தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200% கொடுப்பார். உங்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி. என் அழகான ஜெண்டில்மேன் நடிகரே, பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய தருணங்கள் உங்களைச் சூழட்டும்” என பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளராகவும் ரவி மோகன்
சமீபத்தில் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகமானார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் “ப்ரோ கோட்” மற்றும் “An Ordinary Man” என்ற படங்கள் உருவாகின்றன. இதில் An Ordinary Man படத்தை ரவி மோகன் தானே இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பள விவரம்
இதற்கிடையில், “ப்ரோ கோட்” படத்தில் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் செயல்படும் ரவி மோகன், இத்திரைப்படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இப்படத்தில் நடிக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ரூ.70 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.














