சிக்கிய ரஹ்மான் ? Inspire ஆனதால் ஏற்பட்ட அசிங்கம் !

இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்பவர்களில் ஒருவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையில் 2022-ஆம் ஆண்டு வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் 2. பொன்னியின் செல்வன் முதல் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதனை அடுத்து 2- ஆம் பாகத்தின் பாடல் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்துது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 2- ஆம் பாகத்தின் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீரா பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் இந்த பாடல் தனது தாத்தா மற்றும் தந்தையின் சிவா ஸ்துதி பாடலின் மறுஉருவாக்கம் என்று பயாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார் .

இந்நிலையில் வீர ராஜா வீரா பாடலை தயாரித்த சிவா ஸ்துதி பாடலின் தாக்கத்திலிருந்து தான் தயாரித்தேன் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். எனவே அவர் காப்புரிமையை மீறியுள்ளதால் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை 2 கோடி அபராதம் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

Exit mobile version