கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரம் பதிய முயன்றதாக கூறி ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் மோதல் உருவான நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு கிராமம் பகுதியில் நீர்நிலை க்கு அருகாமையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் திமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் அவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக இருக்கும் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு அதிகாரிகளின் துணையோடு விதிகளுக்கு புறம்பாக DTCP அங்கீகாரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சர்ச்சைகள் கொண்ட இந்த நிலத்தை முறைகேடாக இன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் முயன்றதாக கூறி ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் வலுபெற மோதல் உருவாகும் சூழல் நிலவியது. சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தையில் முறைகேடாக பத்திரம் பதிய முடியாததை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருதரப்பிற்கும் மோதல் உருவான நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.













