மயிலாடுதுறை அருகே தேரிழந்தூர் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ; கூட்டத்தில் கலந்து கொண்ட 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்;-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக இளம் பேச்சாளர் வி.ஆர்.செந்தில் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் பேசுகையில் அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினர். எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறினர். நிகழ்ச்சியின் நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தென்னைமரக்கன்றுகள், புடவைகள் மற்றும் மாற்று திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, சக்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.














