July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் 

by Satheesa
December 30, 2025
in News
A A
0
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர், டிச.29- அனைத்து ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான போட்டா ஜியோ சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபாஷ், ராஜசேகர், நாகேஸ்வரன், ரஜினி, தமிழ்ச்செல்வன், மணிகண்டன், தமிழ்காவலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈவேரா, மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் செங்கேணி ஆகியோர் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பங்களுக்கான கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் 5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை மாற்றி தகுதியுள்ள அனைவருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். தொடக்கக்கல்வித் துறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமையை அமல்படுத்தும் அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர பணியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்வி படித்ததற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதத்தை பணிக்காலமாகக் கருதி ஊதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். இந்த 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் போட்டா ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் போட்டா ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்க நிர்வாகிகள் உமாசெல்வன், கிருஷ்ணமூர்த்தி, முரளி, ஜூலியஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் கார்த்திக் நன்றி கூறினார்.

Tags: BOTA Jiodistrict newsold pension schemeprotesttamilnaduThiruvarur District
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

Next Post

வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026
Next Post
வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.