விழுப்புரம் ஆசான் குளம் பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால் அமைப்பு – எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கு பொதுமக்கள் நன்றி!
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஆசான் குளம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணன் தனது சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சட்டமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணனுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அசாம் குளம் மேம்பாட்டுப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா. லட்சுமணன் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின்போது கவுன்சிலர் மணவாளன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.







