பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்ட தவெக அரசை கண்டித்தும்,முதலமைச்சர் ஜோசப் விஜயை கண்டித்தும்,அதிக அளவில் உயர்ந்துள்ள உரங்களின் விலையை திரும்பப்பெற கோரியும் திருவள்ளூர் மாவட்ட விவசயிகள் மற்றும் உழவர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 25 ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஜோசப்விஜய் கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி செய்வது குறித்த உத்தரவை பிறப்பித்தார்.அந்த உத்தரவானது தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் தமிழ் நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட விவசயிகள் மற்றும் உழவர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டனப் பேரணியையும் அவர்கள் நடத்தி தவெக அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். காவல்துறையினர் பேரணி செல்ல தடுத்தனர் ஆனால் விவசாயிகள் பேரணி சென்றே தீருவோம் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இச்சம்பவத்தால் அப்குதியில் பரபரப்பு ஏற்பட்டது.













